வீட்டிலேயே புரோட்டின் பவுடரை எப்படி செய்வது என பார்க்கலாம்.. 1 கப் தாமரை விதைகள், முந்திரி, பாதாம், கசகசா எடுத்துக்கொள்ளவும் அரை கப் வால்நட்ஸ், எள்ளு விதைகள், பூசணி விதைகள் எடுத்துக்கொள்ளவும் 2 கப் வறுத்த கடலையை எடுத்துக்கொள்ளவும் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றாமல் வறுக்க வேண்டும் 15 நிமிடங்கள் வரை வறுக்கலாம் இந்த பொருட்கள் ஆறிய பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் இந்த பவுடரை காய்ச்சிய பாலில் கலந்து கொண்டு குடிக்கலாம் இதை பாலில் குடிக்காமல் அப்படியே கூட சாப்பிடலாம் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், உடல் வலுவாக இருக்கும். அத்துடன் எலும்புகளும் உறுதியாகும்