கூலாக தன் அணியை கையாள்பவர் தோனி இவர் கிரிக்கெட் விளையாடி பார்த்திருப்போம் விளம்பரங்களில் நடித்து பார்த்திருப்போம் இவர், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் தோனி மற்றும் சாக்ஷி, தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர் இவர்கள் தயாரிக்கும் முதல் படம் குறித்த தகவல் வந்துள்ளது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு, 'Let's get married' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இதில், இவானா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் 80களின் கனவு கன்னி நதியாவும் இதில் நடிக்கவுள்ளார் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார்