காதல் கொண்டேன் படத்துக்கு ஐஸ்வர்யா வாழ்த்து சொல்லியதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது இதனையடுத்து 2004ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி என பலர் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர் 18 ஆண்டுகள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்தனர் சமீபத்தில் இருவரும் தங்களது பிரிவை அறிவித்தனர் இருவரது பிரிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது