நேற்று நடந்த உபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய டெல்லி வெற்றி பெற்றது டாஸ் வென்ற உ.பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தொடக்க ஆட்டக்காரர் லென்னிங் உபி வாரியர்ஸ் அணிக்கு தண்ணி காட்டினார் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 211/4 ரன்கள் குவித்தனர் கடைசி 5 ஓவேரில் அதிரடி காட்டிய ஜெஸ் ஜோனஸன் மட்டுமே 42 ரன்கள் மேல் குவித்தார் உ பி வாரியர்ஸின் வீராங்கனைகள் ஆளுக்கு தலா ஒரு விக்கெட் எடுத்தனர் அடுத்து களமிறங்கிய உ.பி வாரியர்ஸ் அணி தொடக்கத்திலேயே திணறினார்கள் உ.பி அணியை சேர்ந்த தஹிலா மெக்ராத் மட்டுமே 90 ரன்கள் மேல் எடுத்து கடைசி வரை போராடினார் முடிவில் உபி அணி 169/5 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜெஸ் ஜோனஸன் ஆட்டநாயகி விருதை பெற்றார்