15 வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டவர் இசையமைப்பாளார் டி.இமான். கிருஷ்ணதாசி சீரியலுக்கு பின்னணி இசை அமைத்து கேரியரை தொடங்கினார். கோலங்கள், போலீஸ் டைரி என பல சீரியல்களுக்கு இசையமைத்தார் காதலே சுவாசம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழன், கிரி, தலைநகரம், கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். மைனா, கும்கி படங்கள் இவரின் கேரியரில் திருப்பு முனையாக அமைந்தது. விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 117 கிலோவிலிருந்து 75 கிலோ வரை தனது எடையை குறைத்தார்.