கறிவேப்பிலை அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது



வெறும் வாசனைக்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதில்லை



கறிவேப்பிலை பொடி நல்ல பசியை தூண்டும்



சாதத்தில் இந்த பொடியை பிசைந்து சாப்பிடும்போது சிறிது நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுங்கள்



பசியெடுப்பதற்காக செயற்கை மாத்திரைகளையோ டானிக்குகளையோ எடுப்பதை நிறுத்திவிட்டு, கறிவேப்பிலை பொடியை முயன்று பாருங்கள்



கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பசியின்மை, வயிற்றுப் பொருமல், உணவு எதுக்களித்தல் போன்ற செரிமானத் தொந்தரவுகள் அதிகமாக உண்டாகும்



கர்ப்ப காலத்தில் இதை சரிசெய்ய கறிவேப்பிலை பொடியை சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்



சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நல்லது



எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலைகளையும் முகர்ந்து பாருங்கள் நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும்



முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பள்ளிப் பருவத்திலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்ததாம்