இந்த சீசனில், குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ப்ளே ஆஃப்ஸின் முதல் போட்டியில் குஜராத்தும் சென்னையும் மோதியது டாஸ் வென்ற குஜராத் பவுலிங் செய்ய முடிவெடுத்தது ருதுராஜ் மற்றும் கான்வே, முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்தனர் பின்னால் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது 20 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது