டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரன் ஏதும் எடுக்காமால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் டி-20 உலகக் கோப்பை 2024 போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் களமிறங்கினாலும், ஒன்றில் கூட அவரால் இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியவில்லை கனடா அணிக்கு எதிராக 1 ரன்னிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார் அமெரிக்க அணிக்கு எதிரான ரன் ஏதும் எடுக்காமலும் கோலி சொதப்பினார் டி20 உலகக் கோப்பையில் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும் டி20 போட்டிகளில் கோஹ்லிரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது ஆறாவது முறையாகும் கோலி கடைசியாக விளையாடிய நான்கு டி20 இன்னிங்ஸிலும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை தனிப்பட்ட காரணங்களால் கோலி, தாமதமாகவே அமெரிக்கா சென்று உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைந்தார் பயிற்சி ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கோலி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்