காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சீருடை! டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகமாகி உள்ளது ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது இந்த போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடுகின்றன இந்திய அணி தங்களின் முதல் போட்டியில், ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணிக்கு புதிய ஜெர்சி மே 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்த வீடியோவை அடிடாஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வீடியோவில், ஹெலிக்காப்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பறக்கவிடப்பட்டது ஒரே நாடு ஒரே ஜெர்சி என்ற வாசகம், வீடியோவுக்கு கேப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது