டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் ரிஷப் பண்ட் 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று டக் அவுட் ஆகி வெளியேறினார் சூர்யகுமார் யாதவ் 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் பின்னர் வந்த அக்சார் பட்டேல் விராட் கோலியுடன் ஜோடி அமைத்து அருமையாக விளையாடினார் அக்சார் பட்டேல் 31 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 47 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் விராட் கோலி 49 பந்துகளில் தன்னுடைய 38 வது டி20 அரைசதத்தை பதிவு செய்தார் 59 பந்துகளில் விராட் கோலி 76 ரன்களை விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார் ஷிவம் துபே 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 27 ரன்களை குவித்தார் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாட உள்ளது