கடந்த திங்கள்கிழமை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 குரூப் 1 போட்டியில் மோதின இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்து 92 ரன்கள் குவித்தார் இதன்மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்தார் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலை பார்க்கலாம் ரோஹித் சர்மா - 149 இன்னிங்ஸில் 203 சிக்ஸர்கள் மார்ட்டின் கப்தில் - 118 இன்னிங்ஸில் 173 சிக்ஸர்கள் ஜோஸ் பட்லர் - 113 இன்னிங்ஸில் 137 சிக்ஸர்கள் கிளென் மேக்ஸ்வெல் - 103 இன்னிங்ஸில் 133 சிக்ஸர்கள் நிக்கோலஸ் பூரன் - 87 இன்னிங்ஸில் 132 சிக்ஸர்கள்