உலகக்கோப்பை மகுடம் யாருக்கு பரிசுத்தொகை எவ்வளவு? ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் பார்படாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி விளையாடவுள்ளது முதன்முறையாக ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணி விளையாடவுள்ளது பல்வேறு பிரிவுகளில் அணிகள் மற்றும் வீரர்களுக்காக பரிசுகள் வழங்கப்பட உள்ளன இந்திய மதிப்பில் 98 கோடியே 30 லட்ச ரூபாயை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஒதுக்கியுள்ளது இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 கோடியே 42 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடியே 67 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது