மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி! பார்படாஸில் இருந்து பிரத்யேக விமானம் மூலம், இந்திய அணி நேற்று இரவே புறப்பட்டது காலை 6.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்தது இன்று காலை டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய அணி அவருடன் சேர்ந்து காலை உணவையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறது நிகழ்ச்சி முடிந்ததுமே உடனடியாக மும்பைக்கு செல்கின்றனர் மும்பையில் இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு நடக்கிறது அணிவகுப்பை தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்கலாம் ஆங்கிலத்தில் பார்க்க விரும்புவோர் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இல் பார்க்கலாம்