ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் லீக் சுற்றின் முடிவில் 8 அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது இதில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றது குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டது முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் யார் யார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் உறுதியாகியுள்ளது குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உறுதியாகியுள்ளது குரூப் - சி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தேர்வாகியுள்ளன குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேச அணி தேர்வாகியுள்ளன