பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிரைன் லாரா கிரிக்கெட் அகாடெமி மைதானத்தில் நடைபெற்றது

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

19.5 ஓவர்களில் 95 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட்டானது

15.1 ஓவர் முடிவில் இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது

நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் எதிரான லீக் போட்டியில் தோல்வியை தழுவியது

மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகளை மட்டுமே ஈட்ட முடியும்

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுமே, ஏற்கனவே தலா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது

நியூசிலாந்து இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற்றது

மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் வென்றாலும், நீயூசிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது