டி20 உலகக்கோப்பை பற்றி மனம் திறந்த ரோஹித் ஷர்மா! நாங்கள் எங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினோம் நாங்கள் பதற்றம் அடையவில்லை அதுதான் எங்கள் பக்கம் இருந்த மிகவும் நல்ல விஷயம் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கிளாசென் தனி ஆளாக சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசினார் அக்ஷர் படேல் வீசிய 15வது ஓவரில் 24 ரன்களை விளாசினார் இதனால் ஆட்டம் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக மாறியது அர்ஷ்தீப்சிங் மற்றும் பும்ரா வில்லனாக மாறினார்கள் என்றே சொல்ல வேண்டும் அதிரடி காட்டிக் கொண்டிருந்த கிளாசென் அவுட்டாகவுமே இந்தியாவிற்கு நிம்மதி பிறந்தது கடைசி ஓவர் வரை நின்று அச்சுறுத்திக் கொண்டிருந்த டேவிட் மில்லரையும் பாண்ட்யா அவுட்டாக்கினார்