இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் வழங்கிய பிசிசிஐ ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது (ஜூலை 4) வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் இருந்து இந்திய அணி நாடு திரும்பியது இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் மாலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர் வான்கடே மைதானம் நோக்கி உலகக் கோப்பை வெற்றிப்பேரணி தொடங்கியது சாலை முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர் திறந்த பேருந்தில் பேரணியாக வான்கடே மைதானத்திற்கு வந்தடைந்தனர் வெற்றி குறித்து ரசிகர்களிடம் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் பேசினர் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகையாக125 கோடி ரூபாயை வழங்கி கெளரவித்தது