ஜெய்ஸ்வால் படைத்த புதிய உலக சாதனை கடைசி டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் - சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர் சிக்கந்தர் ராசா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே ஜெய்ஸ்வால் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார் சிக்கந்தர் ராசா வீசிய அந்த பந்து நோ பாலாக அமைந்தது சிக்ஸருடன் சேர்ந்து 7 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது ப்ரீ-ஹிட் பந்தையும் ஜெய்ஸ்வால் சிக்கந்தர் ராசா தலைக்கு மேலே நேராக சிக்ஸருக்கு பறக்க விட்டார் இந்திய அணிக்கு முதல் பந்திலே 13 ரன்கள் கிடைத்தது சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலே 12 ரன்கள் அடித்து வரலாற்றுச் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார் ஒரு அணியாக முதல் பந்திலே 13 ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிட்டியது