ஜீரோவும் இப்போ நூறானதே : புது சகாப்தம் படைத்த மேத்யூ ப்ரிட்ஸ்கே

Published by: ABP NADU
Image Source: twitter/@TheRealPCB

பாகிஸ்தான் நாட்டில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இணைந்து பாகிஸ்தான் அணியும் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

Image Source: wiki

இன்று லாகூர் மைதானத்தில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி நடைபெற்றது

Image Source: twitter/@TheRealPCB

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுக வீரராக 26 வயதான மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார்.

Image Source: twitter/@TheRealPCB

சிறப்பாக ஆடிய மேத்யூ ப்ரிட்ஸ்கே சதம் விளாசி தனது ரன் வேட்டையத் தொடர்ந்தார்.

Image Source: twitter/@TheRealPCB

அபாரமாக ஆடிய ப்ரிட்ஸ்கே இறுதியில் 148 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 150 ரன்களில் அவுட்டானார்.

Image Source: twitter

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை மேத் ப்ரிட்ஸ்கே படைத்துள்ளார்.

Image Source: twitter/@TheRealPCB

தெம்பா பவுமா, ஹென்ட்ரிக்ஸ் ஆகியவர்களை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுக போட்டியிலே சதம் விளாசிய 3வது வீரர் ப்ரிட்ஸ்கே ஆவார்.

Image Source: twitter/@TheRealPCB

மேத்யூ ப்ரிட்ஸ்கே இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். அதில் அவர் வெறும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

Image Source: twitter/@TheRealPCB

இவரை ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: twitter