தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது முதல் ஒருநாள் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது ஆட்டத்தை ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் தொடங்கினர் ஷபாலி வர்மா 7 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஹேமலதா 12 ரன்களுக்கு அவுட்டானார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்மிரதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தனர் இந்திய அணி 22 ஓவர்களில் 99 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தீப்தி ஷர்மாவை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஸ்மிரிதி மந்தனா தனி ஆளாக போராடினார் சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா அபார சதத்தை விளாசினார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மந்தனாவுக்கு 6வது சதம் ஆனால் இந்திய மண்ணில் ஸ்மிரிதி மந்தனாவுக்கு இதுவே முதல் சதம்