மாஸ்டர் மைண்ட் அஸ்வினின் கிரிக்கெட் வரலாறு. ரவிசந்திரன் அஸ்வின் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர் 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 211 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 180 விக்கெட்களை எடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பேட் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்கு முக்கிய வீரராக உலா வந்தார். இவர் 211 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் பிரியங்கா நாராயணனை திருமணம் செய்துள்ளார்.