Champions trophy 2025: இந்தியாவுக்கு இறுதி ஆட்டம் சவாலா? சாதகமா?
இன்று நியூஸிலாந்துக்கு எதிராக சாம்பியன்ஸ் கோப்பை 2025 இறுதி ஆட்டத்தை இந்தியா விளையாட உள்ளது
2 மணி அளவில் டாஸ் போடப்பட்டு, 2.30 மணி அளவில் இறுதி ஆட்டம் தொடங்க இருக்கிறது
2025 சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு சவாலாகவும் சாதகமாகவும் அமையும் காரணிகள்...
சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை சேர்த்தது, இந்திய அணிக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றும் அதிகப்படியான விக்கெட்களை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் கூட்டணி தற்போது பெரும் சவாலாக இந்தியாவிற்கு உள்ளது. கடைசி ஆட்டத்தில் இருவரும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது
சாம்பியன்ஸ் கோப்பையில் ரோஹித் சர்மா பெரிதாக ஸ்கோர்களை எடுக்கத் தவறிவிட்டார். இவர் இன்று பெரிய ஸ்கோர் எடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்
இந்தியா அதிக ஆட்டங்களை துபாய் மைதானத்தில் ஆடியுள்ளதால், இது இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி, 10 விக்கெட்களுடன் நல்ல ஃபார்மில் உள்ளார். இது எதிரணியான இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது