ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்



பின் கடலை பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்



பின்னர் அதில் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், புளி சேர்த்து வதக்க வேண்டும்



இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்க வேண்டும்



இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்



இது ஆறியவுடன் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்



இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்



கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னி உடன் சேர்த்து விட வேண்டும்



அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்



இதை சூடான இட்லி, தோசை உடன் பறிமாறலாம்