முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்



தலா 1 டீஸ்பூன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா , சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்



பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்



வர மிளகாய், பூண்டு, புளி, உப்பு, கறி வேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்



இதனுடன் 1 கட்டு வெந்தய கீரையை சேர்த்து வதக்க வேண்டும்



இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்



இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்



தேவைப்பட்டால் இந்த சட்னியை தாளித்துக் கொள்ளலாம்



அவ்வளவுதான் சுவையான வெந்தய கீரை சட்னி தயார்



இதை இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்