2 சீசன்கள் ஹிட் அடித்ததை அடுத்து, குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளது குக் வித் கோமாளி சீசன் 3-ல் நடிகர் சந்தோஷ் பிரதாப் போட்டியாளராக கலந்து கொள்கிறார் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானார் முதல் படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு ’தாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் தேவ், இரும்பு மனிதன், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ’சார்பட்டா பரம்பரை’ ராமன் கதாப்பாத்திரம் இவருக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது அடுத்து, பிசாசு2 படத்தில் நடித்து வருகிறார் சில வெப் சீரீஸ்களிலும் நடித்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப் கோலிவுட், ஓடிடியை அடுத்து சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் வாழ்த்துகள் சந்தோஷ்!