இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்



இறாலை எண்ணெய் சேர்க்காமல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்குக



இறாலில் இருந்து வெளியேறும் தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்துக்கொள்க



கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்



இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்



இறாலை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்



தலா ஒரு ஸ்பூன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்குக



தேவையான தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 5நிமிடம் வேக வைக்கவும்



கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்



கடைசியாக மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்