வெண்ணெய்யில் 50கிராம் தாமரை விதைகளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் கடாயில் சிறிது வெண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்திடுக தலா ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய் சேர்த்து வதக்குக 10 முந்திரி பருப்பு, பொடியாக நறுக்கிய தலா 2 தக்காளி, வெங்காயம் சேர்த்திடுக வதக்கி, இந்த கலவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்க கடாயில் வெண்ணெய் சேர்த்து கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்திடுக நறுக்கிய 1 வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்துள்ள விழுது, 1 கப் நீர் சேர்த்திடுக இது கொதித்ததும் வறுத்து வைத்துள்ள தாமரை விதை சேர்த்து கலந்திடுக அடுப்பை அணைத்து ப்ரஷ் க்ரீம், கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்