வெள்ளைப்படுதல் என்பது, தொற்றுப் பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்



வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம்



பாதுகாப்பற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பின்பற்றாமல் உறவு கொள்வதால் இத்தகைய தொற்று பாதிப்புகள் ஏற்படும்



பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது புண், கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பால்வினைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்



இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படலாம்



சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பிறப்புறுப்பில் புண் உண்டாகி எரிச்சல் ஏற்படலாம்



வெள்ளைப்படுதலின்போது வெளிப்படும் திரவத்தை ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்



பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்



பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்



பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளைத் தேர்வு செய்வது நல்லது