காலை உணவை தவிர்ப்பதால் பல உடல் நல பிரச்சினைகள் உண்டாகும் என்று சொல்வார்கள் ஆனால் ஹெவியான டின்னருக்கு பிறகு காலை உணவை தவிர்க்க வேண்டுமா? அப்படி செய்வது நல்லதா? கெட்டதா? இங்கே பார்க்கலாம்.. ஹெவியான டின்னருக்கு பிறகு உங்களுக்கு பசிக்கவில்லை என்றால் காலை உணவை சாப்பிடாமல் இருக்கலாம் இல்லையெனில் க்ரீன் டீ, நட்ஸ் வகைகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம் நீங்கள் சர்க்கரை நோயாளி என்றால் காலை 11 மணிக்கு உங்கள் காலை உணவை சாப்பிடலாம் மேலும் இரவில் அதிகமான உணவை உண்ணுவதால் பல பிரச்சினைகளும் ஏற்படலாம் இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் கெடும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் இதனால் இரவு, காலை இரு வேளையும் அளவான உணவை எடுத்து கொள்வது நல்லது