பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் சொல்லுங்க. ஆனால், தினமும் பிரியாணி சாப்பிடலாமா? வாரத்திற்கு இரண்டு நாளோ அல்லது ஒருநாளோ சாப்பிடுவதில் தவறில்லை. அதுவும் ஹோட்டல் பிரியாணியாக இல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஏனெனில் அதில் சுவையூட்டி, அதிக எண்ணெய், நிறமூட்டி ஆகியவற்றை சேர்த்திருப்பார்கள். உடல் நலனுக்கு கேடு. எப்போதும் ஃபிரெஷ்சாக சமைத்த பிரியாணியை சாப்பிடுவது சிறந்தது. ஏற்கன்வே சமைத்து ஃபிரிட்ஜில் வைத்ததை சூடு செய்து சாப்பிடக் கூடாது. இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு நாள் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு வேண்டும். இரவு பிரியாணி என்றால் மறுநாள் காலை லைட் ஆன உணவுகளை உண்பது நல்லது. ஆரோக்கியமாக சாப்பிடுவது நல்லது.