தண்ணீரை நம் சௌகரியத்திற்கு ஏற்ப வாட்டர் கேன்களில் அல்லது ஜாரில் ஊற்றி வைப்போம்



படுக்கையறை, சைட் டேபிள் , கார் , வேலை செய்யும் டேபிள் போன்ற இடங்களில் எப்போதும் நாம் தண்ணீரை பிடித்து வைத்திருப்போம்



நாள் முழுவதும் அப்படியே சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது எனில் அதைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்



சிலர் எதுக்கு பிரச்சினை, என கீழே ஊற்றிவிட்டு ஃபிரெஷ் தண்ணீரை பிடித்து குடிப்பார்கள்



சேமித்து வைத்த தண்ணீரை குடிக்கிறீர்கள் எனில் அதன் சுவை மாறியிருப்பதை உணர்ந்திருக்கக் கூடும்



சுவை மாற்றத்திற்கு கார்பன் டை ஆக்சைடுதான் காரணம்



12 மணி நேரம் மூடி வைக்கும்போது, காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அதனுடன் கலக்கத் தொடங்குகிறது



இது தண்ணீரின் pH அளவைக் குறைத்து, சுவையை மாற்றுகிறது



இந்த தண்ணீரை பயமின்றி தாராளமாக குடிக்கலாம்



பெரும்பாலான வல்லுநர்கள் குழாய் நீரின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் என்று கூறுகிறார்கள்