TN agri budget 2025: ரூ.6 லட்சம் மானியம்!

Published by: ABP NADU

TN Agri Budget 2025: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம்

தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்

உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கான 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவித்தார் அமைச்சர்

இதைக் குறித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர் எனக் கூறினார்

அவர்களின் பட்டறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திடும் வகையில், தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்

இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 42 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

இதனால் விவசாயத்திற்கான பொருட்களும் மலிவு விலையில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்களில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

முதல்வர் மருந்தகங்கள் போன்றே முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்களும் செயல்படும்