தமிழ்நாடு பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
தி.மு.க. அரசின் கடைசி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை அருகே புது நகரம், டூவீலர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
பழங்குடியினர் மரபுசார் அறிவைப் பாதுகாக்க ஈரோடு - ப்ர்கூர் கடம்பூர் மலைப்பகுதி - கள்ளக்குறிச்சி - கல்வராயன் மலைப்பகுதி பயன்பெறும் வகையில் பழங்குடியினர் வாழ்வாரக் கொள்கை ரூ.10 கோடி ஒதுக்கீடு
20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும்.
ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் உருவாக்கப்படும்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் 2000 ஏக்கரில் உருவாக்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
நவீன தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம். அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.