முதலில் வெங்காயம் மற்றும் மல்லித் தழையை மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ஒரு கிண்ணத்தில் சோள மாவு, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும் நெய்யில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்குக அந்த பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து சோள மாவு கரைசலை சேர்க்க வேண்டும் இதை கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும் நறுக்கிய ப்ரோக்கோலியை இதில் சேர்த்து, வெந்ததும் தனியாக எடுத்துவிட வேண்டும் இதை ஆற வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதே கடாயில் சேர்த்து சிறிது வேகவிடவும் சற்று கெட்டியானதும் துருவிய சீஸ், மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்