தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் பல நன்மைகள் கிடைக்கும் இது இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது புதிதாகப் பிறந்த குழந்தையை ஒவ்வாமை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது தாய்ப்பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க குழந்தைக்கு தேவையான ஆன்டிபாடிகளும் உள்ளன ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் தாய்ப்பால் எளிதில் ஜீரணமாகும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது நோய்த்தொற்றுகளின் அபாயம் குறைவு உலக சுகாதார அமைப்பு குழந்தைக்கு குறைந்தது ஆறு மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது