நம் உடலை சுத்தமாக வைப்பதற்காக நாம் தினந்தோறும் குளிக்கிறோம்



அழுக்குகள், வியர்வை நாற்றம், தூசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்குவதற்கு சோப்பை பயன்படுத்துகிறோம்



சோப்பிற்கு பதிலாக நிறைய நறுமணமிக்க பாடி வாஷ்களும் கடைகளில் கிடைக்கிறது



நிறைய பேருக்கு சோப்பிற்கும், பாடி வாஷிற்கும் என்ன வித்தியாசம் என்பது தெரிவதில்லை



பெண்கள் சோப்பை விட அதிகளவில் பாடி வாஷ்களையே விரும்புகின்றனர்



பாடி வாஷ் திரவத்தன்மையில் இருப்பதால் இது உங்க உடலுக்கு கூடுதல் ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது



காலை நேர அவசர குளியலுக்கு உங்களுக்கு பாடி வாஷ் ஏற்ற ஒன்றாக இருக்கும்



சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் இதை தினசரி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது



ஈரப்பதமான சருமம் வேண்டும் என்றால் அதற்கு பாடி வாஷ்கள் ஏற்றது



சோப்பை மற்றவர் பயன்படுத்தினால் சருமத் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது பாடி வாஷ்களை பகிர்ந்து கொள்வது எளிதானது