வாழ்க்கையில் வெற்றி பெற காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டால் போதும்! சீக்கிரம் எழுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது அதிகாலை நேரத்தில்தான் தொந்தரவு இருக்காது பழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் முதல் வாழ்க்கை முறை வரை பல மாற்றங்கள் ஏற்படும் எல்லா செயல்களையும் திட்டமிட்டு, மற்றவர்களை விட நீங்கள் கொஞ்சம் அட்வான்ஸாக இருப்பீர்கள் வெற்றியாளர்களும் அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான் நீங்கள் விரும்பிய புத்தகம் படிக்கலாம். அந்த நாளுக்கான திட்டத்தை வகுக்கலாம் அடுத்தடுத்து வேலைகளை தாமதப்படுத்திக் கொண்டே செல்ல மாட்டீர்கள் காலையில் தாமதமாக எழுவதற்கு முக்கியமான காரணம் இரவில் லேட்டாக தூங்குவதுதான் தினமும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்