பலன்களை அள்ளி தரும் சீமை அகத்தி..!



குளிர்காலத்தில் பலருக்கும் பல சரும பிரச்சினைகளும் ஏற்படும்



அவற்றை போக்க சீமை அகத்தி இலையை பயன்படுத்தலாம்



வறண்ட சருமத்தில் சீமை அகத்தி இலையுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்து பூசலாம்



இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் சிறிய முடிகளும் நீங்கலாம்



படர்தாமரையை போக்கவும் சீமை அகத்தி இலை பயன்படுகிறது



பூஞ்சை தொற்றை சரி செய்யவும் உதவுகிறது



உடல் அரிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக இருக்கும்



தேமல் உள்ளவர்களும் இந்த சீமை அகத்தி இலையை அரைத்து தடவலாம்



மிகவும் மென்மையான சருமத்தை கொண்டவர்கள் சரும நிபுணரை ஆலோசித்து கொள்ளலாம்