வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகவும், சரும பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது என்று பார்க்கலாம்.



வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறியதும் அதில் நீராவி புடிக்கலாம்.



இது சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும்.



வேப்ப இலை கொண்டு தயாரித்த நீரை ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம்.



வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.



வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் இரண்டையும் பொடியாக்கி முகத்திற்கு பேஸ்டாக பயன்படுத்தலாம்.



வேப்பிலை பேஸ்ட் தேன், தயிர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.



இது முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.



சருமத்தில் உள்ள நச்சுக்களையும், அழுக்கையும் நீக்கும்.



வாரத்திற்கு ஒருமுறையாது இப்படி செய்யலாம்.