பறவைகளுக்கு கூடு என்பதுபோல, நமக்கு நம் வீடு.. நம் வீட்டிற்குள் நாம் நாமாக இருப்போம். நாம் வசிக்கும் வீடு அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிய சூழல் இருந்தால் சிறப்பாக இருக்கும். வீடு அமைதியுடன் இருக்க பல்வேறு அலங்காரங்கள் செய்வோம். நமக்குப் பிடித்தவற்றை வீட்டின் பல்வேறு இடங்களில் வைப்போம். சுவர்கள் ஓவியம் வரைவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவற்றை செய்வோம் இல்லையா? அப்படிதான், செடி வளர்ப்போம்! செடிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. செடி வளர்ப்பு ஏதோ ஒரு நம்பிக்கையை தருகிறது. சின்ன இலைகள் துளித்து வளர்வது வாழ்க்கைக்கான நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வீட்டுக்குள் செடிகள் வளர்ப்பது ஆக்ஸிஜன் கிடைக்கும், ஒரு குட்டி வனத்திற்குள் வசிப்பது போன்றதொரு உணர்வைத் தரும்.