வெள்ளரிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கிறது.



வெள்ளரிக்காயின் தாவரவியல் பெயர் Cucumis Sativus.



படரும் இயல்பை கொண்ட வெள்ளரிக்காயின் தாயகம் இந்தியா.



வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.



நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி பசியை உண்டாக்கக்கூடியது.



மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.



கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது.



வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன.



உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.



வெள்ளரிக்காயை டயட்டில் சேர்த்துகொள்ளவும்.