சேத்தன் சர்மா - வரலாற்றில் இடம்பிடித்த ஹாட்ரிக் நாயகன்!! இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் சேர்மனாக இருப்பவர் சேத்தன் சர்மா சமீபத்தில் கோலியை கேப்டனிலிருந்து நீக்கியதில் சேத்தன் சர்மா மீது ரசிகர்கள் கடும் கோபத்திலேயே இருக்கின்றனர் கோலி விவகாரத்தில் சேத்தன் சர்மா மீது கோபம் இருந்தாலும் முன்னாள் இந்திய வீரராக இவர் மீது உயர்ந்த மரியாதை உள்ளது ஏனெனில் அவர் செய்த சாதனை அப்படியானது சேத்தன் சர்மா கபில்தேவையும் கவாஸ்கரையும் பார்த்து வளர்ந்தவர் யாஸ்பால் சர்மாவின் சொந்தக்காரர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மாவே 1987 இந்தியாவில் வைத்து நடைபெற்ற உலகக்கோப்பையில் சேத்தன் சர்மா இந்த சாதனையை செய்திருந்தார் சேத்தன் சர்மா கடினமான சமயங்களில் திணறிய போதெல்லாம் கபில்தேவ் அவருக்கு ஆதரவாக நின்றார் ஒவ்வொரு உலகக்கோப்பை ஹாட்ரிக்கின் போது சேத்தன் சர்மா பெயர் நினைவுகூறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இனியும் அப்படியே!