ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவர் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அவதார்’ உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது இந்நிலையில் அவதார் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.3600 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவை பொறுத்தவரை 2 நாட்களில் ரூ.100 கோடியை அசால்ட்டாக அள்ளியது அவதார் படம் 3 நாட்களில் ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது கொரோனாவுக்குப் பின் வெளியாகி வசூலை அள்ளிய படம் என்ற சாதனையை அவதார் தக்க வைத்துள்ளது