ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?

Published by: ABP NADU

டிவிஎஸ் நிறுவனத்தின் Orbiter V2 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது.

Orbiter V2:

அவர்களின் TVS Orbiter இ ஸ்கூட்டருக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கு தனி வரவேற்பு உள்ளது. அதன் சிறப்புகள், விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

158 கி.மீட்டர் மைலேஜ்

இதில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 158 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

கருப்பு - சாம்பல், கருப்பு - வெளிர் சாம்பல் நிறம், கருப்பு - ஆரஞ்சு, நீலம் - அடர்நீலம் என மொத்தம் 6 வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.

5.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும்.

லித்தியம் அயர்ன் பேட்டரி

பிஎல்டிசி ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது.

சிறப்புகள்

கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.