மாருதி XL6 - 6 சீட்டர் கார் மாடலின் விலை சென்னையில் எவ்வளவு?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மாருதி எக்ஸ்எல்6 காரானது சொகுசான 6 இருக்கைகள் கொண்ட வாகனம். பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும்.

இதில் 15 லிட்டர் K15C சீரிஸ் டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் இன்ஜின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது

5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பேடில் ஷிஃப்டர்கள் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது

பெட்ரோல் மேனுவல் லிட்டருக்கு சுமார் 20.97 கிமீ, பெட்ரோல் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு சுமார் 20.27 கிமீ மைலேஜ் தருகிறது

மைலேஜ் அதிகமாக வேண்டுமென்றால் சிஎன்ஜி வேரியண்ட் உள்ளது. இது கிலோவிற்கு 26.32 கிமீ மைலேஜ் தருகிறது

7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே உடன் 40க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்கள் கொண்ட சுசுகி கனெக்ட் செயலியை ஆதரிக்கிறது.

எளிதாக பார்க்கிங் செய்ய வசதியாக இதில் 360 டிகிரி வியூ கேமரா அம்சம் வழங்கப்பட்டுள்ளது முன் வரிசை இருக்கைகளுக்கு காற்றோட்டமான இருக்கைகள் வசதி உள்ளது

4 ஏர்பேக்குகள், ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைகள், EBD உடன் ABS ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன

பயணத்தின்போது நான்கு டயர்களிலும் உள்ள காற்று அழுத்தத்தை ஓட்டுநர் டிஸ்ப்ளேயிலேயே பார்க்கும் வகையில் TPMS அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது

XL6 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கார் உள்ளே சூரிய வெப்பம் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் வராமல் தடுக்கும் சிறப்பு UV Cut Glasses வழங்கப்பட்டுள்ளன

அடிப்படை மாடல் XL6 Zeta ஆன்ரோடு விலை ரூபாய் 14,75,000, டாப் வேரியண்ட் XL6 Alpha Plus ரூபாய் 18,40,000