இந்திய ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்(SIAM), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன
வரும் ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
கார் தயாரிப்பாளர்கள் அவர்களின் மாடல்களை கான்செப்டாகவோ அல்லது உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள எடிஷனாகவோ காட்சிப்படுத்துவர்.
இந்நிகழ்ச்சியில் பல முன்னனி பிராண்டுகள் விற்பனைக்கு தயாராக உள்ள மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவிப்பின்படி, இந்த மோட்டர் ஷோ டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பாரத் மண்டபத்திற்கு அருகில் உள்ளது உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம். கேட் 10-லிருந்து எக்ஸ்போ நடக்கும் இடத்திற்கான போக்குவரத்து சேவையை அணுகலாம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. டெல்லி விமான நிலையம் 17 கி.மீ தொலைவில் உள்ளது.
ஜனவரி 17 ஊடகவியலாளர்களுக்கும், 18 சிறப்பு அழைப்பிடழ் கொண்ட பார்வயாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19 - 22 பொதுவான பார்வையாளர்களுக்கான தேதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
BMW, Porsche, Maruti, Hyundai போன்ற கார் உற்பத்தியாளர்கள் கண்காட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.