சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கால்பதித்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன.



2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கையின் டம்புள்ளா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி முதல் முறையாக களமிறங்கினார்.



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



அதில், “14 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தொடங்கிய பயணம்.. இது எனக்கு பெருமையான ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.



14 ஆண்டுகளில் விராட் கோலி 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12344 ரன்களை குவித்துள்ளார்



அத்துடன் 102 டெஸ்ட் போட்டிகளில் 8074 ரன்களும், 99 டி20 போட்டிகளில் 3308 ரன்களும் அடித்து அசத்தியுள்ளார்.



ஒரு நாள் போட்டிகளில் 43 சதமும், டெஸ்ட் போட்டியில் 27 சதமும் அடித்துள்ளார்.



மொத்தமாக அவர் 70 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.



இவர் சதம் அடித்து சுமார் 990 நாட்களுக்கு மேலாகி உள்ளது.



திரும்பி வாங்க விராட்!