இந்த ஆடிப்பூரத்தில் இதை செய்தால் உடனே கல்யாணம் நடக்கும்! ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள் ஆகும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரமே ஆடிப்பூரம் ஆகும் உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தியாக அவதரித்த தினமே ஆடிப்பூரம் என்று புராணங்கள் கூறுகிறது நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம்(Aadi Pooram) வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது இதன் காரணமாகவே ஆடிப்பூரத்தை கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர் இந்த நன்னாளில் அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு விழாவில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இந்த வளையல்களை அணிவதால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம் இந்த வளையல்களை திருமணம் ஆகாத பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் ஐதீகம்