ஆடி பிரதோஷம் 2024! சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம் இந்த ஆகஸ்ட் மாதம் வருகிறது பிரதோஷ நன்னாளில் சிவபெருமானை வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வமாக 3 பிரதோஷம் வருகிறது இதுபோன்ற அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த மாதத்தின் முதல் பிரதோஷத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அடுத்த 2 பிரதோஷங்களுக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம் இனி வரும் 17ம் தேதி மற்றும் வரும் 31ம் தேதி மற்ற இரண்டு பிரதோஷ நாட்கள் ஆகும் பிரதோஷ தின வழிபாட்டின் மூலம் திருமண யோகம் கிடைக்குமாம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், கடன் பிரச்சினை தீரும் எனவும் நம்பப்படுகிறது