கனவில் பாம்பு வருவதற்கு காரணம் என்ன? விலங்குகள் கனவில் வருவது இயல்பாக நடக்கின்ற ஒன்றுதான் சிலருக்கு நாய்கள் கனவில் வரும் சிலருக்கு பறவைகள் கனவில் வரும் சிலருக்கு வீட்டில் வளர்க்கக்கூடிய பூனைகள் கனவில் வரும் கனவில் பாம்பு உங்களை கொத்தினால் நிச்சயமாக அது நல்லது . ஏற்கனவே இருந்த கஷ்டங்கள் விலகி சந்தோஷங்கள் பெருகுமாம் பாம்பு ஒருவரை துரத்துவது போல கனவு கண்டால் எதையோ கண்டு நீங்கள் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம் ஏதோ ஒரு இடத்தில் பாம்பு உங்கள் அருகில் படுத்திருப்பது போல கனவு வந்தால், அந்த கனவின் சம்பவங்கள் உங்களை பெரிதாக பாதிக்காதாம் பாம்பு உங்கள் காலை சுற்றிக் கொண்டிருப்பது போல கனவு கண்டால் பிரச்சனையின் மூலம் நீங்கள் வெற்றி காண போகிறீர்கள் என்று அர்த்தமாம் பாம்பு உங்களை எந்த விதத்திலும் தீண்டாமல் கடந்து சென்றால் எந்த பிரச்சனையிலும் நீங்கள் சிக்காமல் இருப்பீர்களாம் முன்குறிப்பிட்ட அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்ட தகவலாகும்